"அவன் இவன் படத்துக்கு பின், ஸ்ரீகாந்துடன் "பாகன் படத்தில் நடித்த ஜனனி அய்யருக்கு, மலையாள கரையோரத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளதால், மிகவும் குஷியாக இருக்கிறார். "த்ரீ டாட்ஸ்என்ற மலையாள படத்தில் நடிப்பதற்காக, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிஜு மேனன், பிரதாப் போத்தன் போன்ற ஜாம்பவான்களுடன் நடிக்க போவதால், இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும் ஜனனி அய்யர்,"மலையாள படங்களில் நடிப்பதை, மிகவும் நேசிக்கிறேன். இந்த படத்தின் கதை, என்னை ரொம்பவே "இம்பரஸ் செய்து விட்டது. மலையாளத்தில் நடிக்க, யாராவது அழைக்க மாட்டார்களா என, காத்துக் கொண்டிருந்தேன். என் காத்திருப்பு வீண் போகவில்லை. மலையாளத்தில் சரளமாக பேசத் தெரியாவிட்டாலும், தமிழ் நன்றாக தெரியும் என்பதால், மலையாளத்தை புரிந்து கொள்வது ரொம்ப சிரமமாக இருக்காது. மலையாளத்தில் முன்னணி நடிகையாவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்காக, அதிகமான மலையாள படங்களை பார்த்து வருகிறேன் என, கண்கள் பட படக்க பேசுகிறார், ஜனனி அய்யர்.
No comments:
Post a Comment