Monday, November 5, 2012

தகவல் தொழில்நுட்பத்தில் நடக்கும் பிரச்னைகள் தான் மை பாஸ்!

சமூகத்தில் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து, படம் எடுப்பதில், மலையாள திரையுலகினர், மிகவும் கில்லாடிகள். அந்த வரிசையில், தற்போது பெரிதும் பேசப்படும், தகவல் தொழில் நுட்ப துறையில் நடக்கும் பிரச்னைகளை, காமெடியாகவும், சீரியசாகவும், ரொமான்டிக்காகவும்,  காட்சிப்படுத்தி, "மை பாஸ் என்ற படத்தை தயாரித்துள்ளனர். மலையாள திரையுலகின் இளம் இயக்குனரான, ஜித்து ஜோசப் இயக்கும் மூன்றாவது படம் இது. இதில், மம்தா  மோகன் தாஸ், தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனத்தின் உரிமையாளராகவும், திலீப், அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியராகவும்  நடித்துள்ளனர். இவர்களுக்குள் நடக்கும், முட்டல், மோதல், காதல், கோபம் ஆகியவற்றின் காக்டெயில் தான், "மை பாஸ் படம்.

No comments:

 
FreeWebSubmission.com