Monday, November 19, 2012

தமிழுக்கு வரும் டில்லி அழகி நீலாம்பரி

குழந்தை நட்சத்திரமாக நடித்து, பிரபலமான மாஸ்டர் மகேந்திரன்,  "போரிடப்பழகு என்ற படத்தில், ஹீரோவாக நடிக்கிறார்.  "ஆற்று மணலை  ஆழமாகத் தோண்டி, வானுயர மாளிகைக் கட்டுவது என்பது, விபரீதத்தை,  நாமே விலை கொடுத்து வாங்குவதற்கு சமம் என்ற கருத்தின் அடிப்படையில் உருவாகும் இப்படத்தில் ஆக்ஷனுக்கும் பஞ்சம் இல்லையாம். இந்த படத்தில், மகேந்திரனுக்கு ஜோடியாக, நீலாம்பரி என்ற டில்லி அழகி நடிக்கிறார். அங்கு, பிறந்து வளர்ந்தவர் என்றாலும், இவர் அக்மார்க் தமிழ் பெண்ணாம். அதனால், பக்கம் பக்கமாய், "டயலாக் கொடுத்தாலும், பத்தே நிமிடத்தில்,  மனப்பாடம் செய்துவிட்டு, கேமரா முன், "கேஷுவலாக  வெளுத்துக் கட்டுகிறாராம்.

No comments:

 
FreeWebSubmission.com