Friday, November 2, 2012

எம்.டி.வி.யில் மணிரத்னத்தின் கடல் பட பாடல் வெளியீடு

மணிரத்னம் இயக்கி வரும் கடல் படத்தில் ஒரே ஒரு பாடலை மட்டும் வெளியிட உள்ளனர். அந்தப்பாடல் வெளியீடு எம்.டிவி.,யில் ஒளிபரப்பாக இருக்கிறது. ராவணன் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் படம் கடல். இப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கவுதம் ஹீரோவாகவும், நடிகை ராதாவின் இரண்டாவது மகள் துளசி ஹீரோயினாகவும் களம் இறங்குகின்றனர். இப்படத்துக்கு மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் "நெஞ்சுக்குள்ளே...." என்ற ஒரே ஒரு பாடலை மட்டும் வெளியிட இருக்கின்றனர்.  உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த பாடலை ஒரே நேரத்தில் கொண்டு சேர்ப்பதற்காக எம்.டி.வி மூலம் இந்த பாடலை வெளியிடவிருக்கிறார்கள். மேலும் இந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நேரடியாகவே இசையமைக்க போகிறார். இந்த நிகழ்ச்சி வரும் 3-ம் தேதி இரவு 8 மணிக்கு எம்.டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

No comments:

 
FreeWebSubmission.com