ஜப்பான் நாட்டின் டோக்கியோ டி.வி நமீதாவின் புகைப்படத்தை வைத்து அவரை இந்திய அழகியாக தேர்வு செய்திருப்பதற்கு தென்னிந்திய நடிகைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து கோலிவுட்டின் பிரபல நடிகைகள் சிலர் கூறும்போது, அழகி என்றால் அதற்கென்று சில முக்கிய அம்சங்கள் வேண்டும். ஆனால் அப்படி எதுவுமே இல்லாத ஒரு நடிகையை எப்படி இவர்கள் இந்திய அழகியாக தேர்வு செய்யலாம் என்று அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.
இன்னும் சிலரோ, இப்படி ஒரு நடிகையை தேர்வு செய்து ஜப்பான் டி.வி ஒளிபரப்பும்போது, இந்தியாவின் சிறந்த அழகே இதுதானா? என்று இங்குள்ளவர்களின் அழகினை குறைத்து மதிப்பிடுவார்கள். அதனால் இப்படி அவர்களாக அவர்களுக்கு வேண்டப்பட்ட ஒரு நடிகையை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு போட்டியை நடத்தி அவர்களே தீர்ப்பையும் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குமுறுகிறார்கள்.

No comments:
Post a Comment