Friday, November 9, 2012

கடலுக்கு பாராட்டு மகிழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான்!

மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவுள்ள, "கடல் படம் மீதான எதிர்பார்ப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. "கடல் படத்தில் இடம் பெற்றுள்ள, "நெஞ்சுக்குள்ளே என்ற பாடல் மட்டும், முதல் கட்டமாக, சமீபத்தில் வெளியிடப்பட்டது. "டிவி சேனல் ஒன்றின் நிகழ்ச்சியின் மூலம், ஏ.ஆர்.ரகுமானே, நேரடியாக பங்கேற்று, இந்த பாடலை பாடினார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்த, அடுத்த சில நிமிடங்களுக்குள், சமூக வலைத்தளங்களில், இந்த பாடலுக்கு பாராட்டு குவிந்து விட்டது. ஆயிரக்கணக்கானோர், ரகுமானின் பாடலை, பாராட்டி தள்ளி விட்டனர். பாடலுக்கு கிடைத்த பாராட்டு, ரகுமானை உற்சாகப்படுத்தியுள்ளதை அடுத்து, பாராட்டியவர்களுக்கு, மிகவும் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.

No comments:

 
FreeWebSubmission.com