"வாண்டட், ரவுடி ரத்தோர் படங்களின் கலக்கலான வெற்றிக்கு பின், பாலிவுட்டின் பிசியான இயக்குனர்களின் பட்டியலில், பிரபு தேவாவும் இடம் பிடித்து விட்டார். தற்போது அவர், க்ரிஷ் குமார், ஸ்ருதி ஹாசன் நடிக்கும் ஒரு படத்தையும், ஷாகித் கபூர், சோனக்ஷி சின்கா நடிக்கும் ஒரு படத்தையும் இயக்கி வருகிறார். அதற்குள், அடுத்த "புராஜெக்ட் அவருக்காக தயாராகி விட்டது. பிரபல நடிகர் சஞ்சய் தத், விரைவில் மூன்று படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். அதில் ஒரு படத்துக்கு பிரபு தேவா தான், இயக்குனர். மற்ற இரண்டு படங்களை, ரோகித் ஷெட்டியும், மிலன் லூத்ரியாவும் இயக்கவுள்ளனர்.
Thursday, October 18, 2012
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment