Thursday, October 18, 2012

தீபாவளிக்கு ரீலிஸ் ஆகிறது கள்ளத்துப்பாக்கி!

கள்ளத்துப்பாக்கி என்ற பெயரில் உருவாகியிருக்கும் புதிய படம் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகிறது. கமல்ஹாசனின் உதவியாளர் கே.சி.ரவிதேவன் தயாரித்துள்ள இப்படம் முற்றிலும் புதுமுகங்கள் நடித்த படம். டைரக்டர் லோகியாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் ரவிதேவன் அளித்துள்ள பேட்டியில். கள்ளத்துப்பாக்கி படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பு 60 நாட்கள் ஒத்திகை பார்க்கப்பட்டது. இன்டர்கட் முறையில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. எடிட்டிங்கிலும் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எஸ்.பி.தமிழ்செல்வன், குட்டி ஆனந்த் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாகவும், கேரள அழகி ஷாவந்திகா கதைநாயகியாகவும், முக்கிய வேடத்தில் குருபகவான், சம்பத்ராம், சிந்தியா நடித்துள்ளனர். ஏ.வி.வசந்த் ஒளிப்பதிவை கையாள, எஸ்.கே.பாலசந்திரன் இசையமைத்து இருக்கிறார், என்று கூறியுள்ளார்.

No comments:

 
FreeWebSubmission.com