Wednesday, October 17, 2012

ஜெயம் ரவி படத்துக்கு பைனான்ஸ் பிரச்னை?

சமீபகாலமாக புதுமுக நடிகர்களின் படங்களுக்குத்தான் யாருமே பைனான்ஸ் செய்வதில்லை. பெரிய நடிகர்களின் படங்களுக்கு அந்த மாதிரி பிரச்னைகள் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது ஜெயம் ரவி வடசென்னை பாக்சராக நடித்து வரும் பூலோகம் படத்துக்கு பைனான்ஸ் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனால் ஆதிபகவனை முடித்த கையோடு அடுத்தடுத்து கதைகள் கேட்டு நடிப்பதில் தீவிரமடைந்திருக்கிறார் ஜெயம் ரவி. மேலும், படத்தில் நடித்த டெக்னீஷியன்கள் மற்றும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு பல நாட்கள் வேலை செய்ததற்கான சம்பள பாக்கி உள்ளதாம். அதன் காரணமாக, சிலர் ஏற்கனவே தர வேண்டிய சம்பள பாக்கியை தந்தால்தான் அடுத்து படத்தில் வேலை செய்வோம் என்றும் கொடி பிடித்திருக்கிறார்களாம். இதனால் பூலோகம் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

 
FreeWebSubmission.com