"கலகலப்பு படத்தில், அதிரடி கவர்ச்சிக்கு அடித்தளம் போட்ட அஞ்சலி, "சேட்டை படத்திலிருந்து ஸ்டைலிஷான நடிகையாகமாறியுள்ளார். "இதற்கு முன், நான் நடித்த படங்களில் அதிகமாக பேசியிருப்பேன். ஆனால், இந்த படத்தில் பேச்சைக் குறைத்து, ஸ்டைலிஷான பர்பாமென்சை வெளிப்படுத்தியுள்ளேன் என்கிறார்.மேலும், இதற்கு முன்பு முத்தக்காட்சி என்று வாய் திறந்தாலே டைரக்டர்களை எரித்து விடுவது போல் பார்த்து வந்த அஞ்சலி, இப்படத்தில் ஆர்யாவுடன் முத்தக் காட்சியிலும் நடித்துள்ளார்.அவரிடத்தில், முத்தக் காட்சியில் நடிப்பதை தொடருவீர்களா? என்றால், "அதை நான் முடிவு செய்ய முடியாது. கதைகள் தான் முடிவு செய்ய வேண்டும். கதைக்கும், காட்சிக்கும் அவசியப்படுகிற போது கண்டிப்பாக நடிப்பேன் என்கிறார், அஞ்சலி.
Monday, April 1, 2013
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment