பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப், ஏராளமான ஹிட் படங்களில் நடித்தவர். வயதானாலும், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன், இவர் நடித்த, "பா என்ற படம், அமிதாப்பின் நடிப்பு திறமை, இன்னும் மங்கி விடவில்லை என, நிரூபித்தது. தற்போது, சத்யகிரஹா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கு பின், மன அமைதிக்காக, ஒரு ஆண்டு, ஓய்வு எடுக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, தன்னுடைய "பிளாக்கில், அமிதாப், "வயதாகி விட்டது. எனவே, தொடர்ந்து படங்களில் நடிப்பதிலிருந்து, சற்று ஓய்வும், மன அமைதியும் தேவைப்படுகிறது. இதற்காக, அடுத்த ஒரு ஆண்டுக்கு, எந்த படத்திலும் நடிப்பதில்லை என, முடிவு செய்துள்ளேன். ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள, ஒரு விழாவில், என்னை கவுரவிக்க உள்ளனர். அந்த விழாவில் பங்கேற்ற பின், அமெரிக்கா செல்லவுள்ளேன். அதற்கு பின், ஒரு ஆண்டுக்கு ஓய்வு தான் என, எழுதியுள்ளார்.
Wednesday, April 3, 2013
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment