"பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களை அடுத்து விஜய சேதுபதியின் நடிப்பில் வெளியாகவுள்ள படம், சூது கவ்வும். இதில், 40 வயதை கடந்த வேடத்தில் நடித்துள்ளார் விஜய சேதுபதி. அவரது தலையிலும், மீசையிலும் ஆங்காங்கே நரைமுடி தென்படுகிற வேடம். இதுபற்றி அவர் கூறும் போது, "என்னைப் பொறுத்தவரை, கதைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். இளமையாகத்தான் நடிப்பேன் என்று சொல்லாமல், கதை, என்னை எத்தனை வயதுக்காரனாக நடிக்கச் சொல்கிறதோ, அதற்கேற்ப என்னை முழுசாக மாற்றிக் கொண்டு நடிக்க தயாராகியிருக்கிறேன். அது, 40 வயதோ, 60 வயதோ எதுவாக இருந்தாலும் தயங்காமல் நடிப்பேன் என்கிறார், விஜயசேதுபதி.
Monday, April 1, 2013
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment