Friday, March 15, 2013

விஜய் - மோகன் லால்இணையும் "ஜில்லா

தற்போது, "தலைவா படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்தபடியாக, "ஜில்லா படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த படம், தன் முந்தைய படங்களைவசூல் ரீதியாக முறியடிக்கும் என்று நம்பும் விஜய், இப்படத்தில், "துப்பாக்கியில் என்னுடன் ஜோடி சேர்ந்தகாஜல் அகர்வால் நடிக்கிறார்.  மேலும், இப்படத்தின் ஒரு முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் மோகன் லால்நடிக்கிறார். அவருடன் நடிக்கும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்கிறார் விஜய். மோகன் லால், ஏற்கனவே, பிரபுவுடன், "சிறைச்சாலை படத்திலும், கமலுடன்,"உன்னைப் போல் ஒருவன் படத்திலும் நடித்துள்ளார். தற்போது, விஜயுடன் இணைவது, கோடம்பாக்கத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

 
FreeWebSubmission.com