1993ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர். 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் 12 பேருக்கு தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டடைனயும் விதித்து, "தடா கோர்ட் உத்தரவிட்டது. இவ்வழக்கில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது, ஆயுதங்களை வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவருக்கு, ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தடா கோர்ட் உத்தரவிட்டது.
இதனையடுத்து கடந்த 2007ம் ஆண்டு முதல் 18 மாதம் சிறைவாசம் அனுபவித்தார் சஞ்சய் தத். பின்னர் ஜாமினில் வெளியே வந்தார் சஞ்சய் தத். இந்நிலையில் இவ்வழக்கு மீதான இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று வந்தது. அதில் சஞ்சய் தத்துக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 6 ஆண்டு சிறை தண்டனையை 5 ஆண்டாக குறைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஏற்கனவே சஞ்சய் தத் 1.5 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்துவிட்டதால் மீதமுள்ள 3.5 ஆண்டு சிறைவாசம் மேற்கொள்ள இருக்கிறார். இன்னும் ஒருவார காலத்திற்குள் சஞ்சய் தத் சரண் அடைய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment