சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர் மோகன்பாபு. அவரது மகள் லட்சுமி பிரசன்னா தயாரித்து, நடித்துள்ள படம் "மறந்தேன் மன்னித்தேன்". இந்தப் படம் தெலுங்கில் "கொண்டலோ கோதாவரி" என்ற பெயரில் வெளியாகி ஹிட்டாகி உள்ளது. தமிழில் நாளை (மார்ச் 22) வெளிவருகிறது. இதையொட்டி படத்தை லட்சுமி பிரசன்னா, ரஜினிக்கு போட்டுக் காட்டினார். ரஜினியின் போயஸ்கார்டன் வீட்டில் உள்ள மினி திரையரங்கில் படம் திரையிடப்பட்டது. அதனை ரஜினி குடும்பத்தினருடன் அமர்ந்து பார்த்தார். படத்தில் லட்சுமியின் நடிப்பை பாராட்டிய ரஜினி. அவரது தந்தை மோகன்பாபுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினார். படத்திற்கு இசை அமைத்திருக்கும் இளையராஜாவுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
Thursday, March 21, 2013
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment