மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் கடல். இந்த படத்தில்
அர்ஜூன், அரவிந்தசாமி, கெளதம், துளசி ஆகியோர் முக்கிய வேடங்களில்
நடித்திருந்தனர். ஜெயமோகன் கதை வசனம் எழுதியிருந்தார். மிகுந்த
எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இப்படம் தோல்வியடைநது விட்டது.
அதையடுத்து, படத்தை வாங்கிய சில விநியோகஸ்தர்கள் மணிரத்னத்திடம் நஷ்டஈடு
கேட்டு போர்க்கொடி பிடித்தனர். அதில் மன்னன் பிலிம்ஸ் சார்பில்
தங்களுக்கு ஏற்பட்ட 17 கோடி நஷ்டத்தை மணிரத்னமே தர வேண்டும் என்று
நீதிமன்றத்தை நாடினர். அது மட்டுமின்றி, மணிரத்னத்தின் அலுவலகத்துக்கும்
சென்று ரகளை செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மணிரத்னம், நான் கடல் படத்தை ஜெமினி பிலிம்சிடம்தான் விற்றேன். அவர்கள்தான் மற்றவர்களுக்கு விற்பனை செய்திருக்கிறார்கள். அவர்கள் யார் யாருக்கு விற்றார்கள் என்பதுகூட எனக்குத் தெரியாது. இந்த நிலையில், யார் என்றே எனக்கு தெரியாத நபர்கள் என்னிடம் வந்து நஷ்டஈடு கேட்கிறார்கள். கடல் படத்தின் வியாபாரத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நீதிமன்றத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்.
அதோடு, தனது அலுவலகத்தை தாக்கிய மன்னன் பிலிம்ஸ் தனக்கு நஷ்டஈடாக 5 கோடி தர வேண்டும் என்றும் தற்போது தனது சார்பில் வழக்கு தொடர்ந்திருப்பதோடு, தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். மணிரத்னம் எடுத்த இந்த நடவடிக்கையினால், நஷ்டஈடு கேட்டவர்கள் ஆடிப்போயிருக்கிறார்கள்.

No comments:
Post a Comment