பருத்திவீரனுக்குப்பிறகு தொடர்ச்சியாக சில ஹிட்களை கொடுத்து வந்தவர் கார்த்தி. ஆனால் சகுனி, அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்கள் அவருக்கு எதிர்பாராத அதிர்ச்சியை கொடுத்து விட்டன. அதனால் இப்போது புதிதாக கதை கேட்கும் படங்களிலும் சரி, கதை கேட்டு ஓ.கே செய்து நடித்து வரும் படங்களிலும் சரி கதையையும், காட்சியையும் அடிக்கடி துருவி துருவி கேட்கிறாராம். அதிலும் பிரியாணி படத்தை இயக்கி வரும் வெங்கட்பிரபுவை அடிக்கடி டார்ச்சர் செய்கிறாராம் கார்த்தி.
ஸ்பாட்டில் காட்சியை படமாக்கிக்கொண்டிருக்கும்போதோ அல்லது வீட்டிற்கு சென்றபிறகோ ராத்திரி நேரங்களில்கூட திடீர் திடீரென்று போன் போட்டு, சில காட்சிகளை முதலில் என்னிடம் சொன்னபடி படமாக்கவில்லை என்று சொல்லி, ரீஷூட் பண்ணச்சொல்கிறாராம். இதனால் பல காட்சிகளை கார்த்தி சொன்னதுபோல் மாற்றி படமாக்கி வருகிறாராம் வெங்கட்பிரபு. மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என்ற தோல்வி பயத்தில் அவர் அப்படி சொல்கிறார் என்றாலும், இப்போது வெங்கட்பிரபுவுக்கும் கதையில் அதிருப்தி ஏற்பட்டு விட்டதாம். அதனால் அடிக்கடி ஸ்பாட்டில் நின்றுகொண்டே கதையில் திருத்தங்களை செய்து வருகிறாராம். இதனால், பிரியாணி செய்வதற்கு இரண்டு பேரும் இரண்டுவிதமான ஐடியா கொடுத்து கடைசியில் உப்புமா கிண்டப்போகிறார்கள் என்று அவர்களின் ஸ்பாட் சண்டையை பார்ப்பவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்.

No comments:
Post a Comment