Tuesday, January 22, 2013

ஆர்யாவை ஜொள் விட வைத்த விஷால்!

விஷாலும், த்ரிஷாவும் நீண்டகால நண்பர்கள்தான். ஆனபோதும் அவர்கள் சமர் படத்தில்தான் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். அப்படி த்ரிஷாவுடன் நடித்தது விஷாலுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்ததாம். அதிலும், ரொமான்ஸ் காட்சிகளில் வேறு நடிகைகளிடம் இல்லாத இயல்பான நெருக்கம் இருந்ததாம். அவருடன் நடித்து விட்டு வீட்டிற்கு வந்தபிறகும் ஒருவித ஈர்ப்பு இருந்து கொண்டேயிருந்ததாம். இப்படி த்ரிஷாவின் ரொமான்டிக் நடிப்பு பற்றி சினிமா வட்டார நண்பர்களிடம் பீலோடு சொல்லி வருகிறார் விஷால்.

அதுமட்டுமின்றி த்ரிஷாவிடம் மற்ற நடிகைகளிடம் இல்லாத ஒரு கவர்ச்சியும் உள்ளது. அதை அவருடன் கலந்து நடிக்கிறபோதுதான் உணர முடியும் என்றும் ஸ்பெசல் எபெக்டுகளுடன் சொல்லி எச்சில் ஊற வைக்கிறாராம் விஷால். அப்படி அவர் சொல்வதை இமை கொட்டாமல் கேட்ட ஆர்யாவும் அடுத்து த்ரிஷாவுடன் நடித்தே தீருவது என்று ஜொள் விட்டுக்கொண்டு திரிகிறார். அதனால் தன்னிடம் கதை சொல்லியிருக்கும் இயக்குனர்களை தொடர்பு கொண்டு த்ரிஷாவை ஹீரோயினியாக போடுங்கள் என்று கட்டளை போட்டிருக்கிறார் ஆர்யா.

No comments:

 
FreeWebSubmission.com