Friday, January 18, 2013

சுயசரிதை எழுதும் "மாஜி ஹீரோயின்!

தமிழில், "இந்தியன், முதல்வன், பாபா உட்பட  பல படங்களில் நடித்தவர், பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா. சமீபகாலமாக மார்க்கெட் மந்தமானபோதும், தன் நடிப்பாற்றலைக் கொண்டு, சினிமாவில் தொடர்ந்து தன்னை தக்க வைத்து வந்தார். திடீரென்று ஒரு நாள் மயங்கி விழுந்த போது, அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். இதையடுத்து, சினிமா உலகை விட்டு, முற்றிலுமாக விலகியிருக்கும் மனிஷா கொய்ராலா, ஆன்மிக பாதையில் மனதை திருப்பி விட்டுள்ளார். தன் கடந்த கால வாழ்க்கையை அசைபோடத் தொடங்கியிருக்கும் அவர், சுயசரிதை எழுதும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

No comments:

 
FreeWebSubmission.com