Friday, January 18, 2013

பீட்சா தயாரிப்பாளரின் அடுத்த படம் சூது கவ்வும்!

பீட்சாவைத் தயாரித்த திருக்குமரன் எண்டர்டயின்மெண்ட் நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படம் சூது கவ்வும். பீட்சா ஹீரோ விஜய் சேதுபதிதான் இதிலும் ஹீரோ. சஞ்சிதா ஷெட்டி ஹீரோயின். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். "இது பிளாக் காமெடி டைப் படம். அதாவது திகில் படத்தில் காமெடி. இண்டர்கட் ஷாட்டுகள் மூலம் புதுமையான முறையில் கதை சொல்லப்போகிறோம். இது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்பதால் கதை பற்றிச் சொல்ல முடியாது" என்கிறார் இயக்குனர் நலன் குமாரசாமி.

No comments:

 
FreeWebSubmission.com