Sunday, January 6, 2013

அஜீத்துக்கு ரூட் போடும் புன்னகைபூ கீதா!

புன்னகை பூ படத்தில் நடித்தவர் கீதா. அதன்பிறகு சினிமா சில படங்களை தயாரித்த அவர், கடைசியாக சோனியா அகர்வாலை வைத்து ஒரு நடிகையின் வாக்குமூலம் என்ற படத்தை தயாரித்தார். ஆனால் அந்த படமும் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதனால் இனி ஸ்டார் வேல்யூ உள்ள படங்களை மட்டுமே தயாரிப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். அப்படி அவர் யாரை வைத்து படம் பண்ணலாம் என்று ஆலோசித்தபோது அஜீத்தான் அவர் மனக்கண்ணில் தோன்றினாராம்.

காரணம், அஜீத்துடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது கீதாவின் நீண்ட நாள் ஆசையாம். அதனால் அவருடன் டூயட் பாடவில்லை என்றாலும், அவர் நடிக்கிற படத்தை தான் தயாரித்து அதில் ஒரு கேரக்டரில் நடித்து விட வேண்டும் என்று முண்டியடித்து வருகிறார் நடிகை. ஆனால் விஷ்ணுவர்தன் படத்தில் நடித்து விட்டு, அடுத்து சிறுத்தை சிவா படத்துக்காக தன்னை தயார்படுத்தி வரும் அஜீத், கீதாவுக்கு இன்னும் எந்த பதிலும் சொல்லவில்லையாம். இருப்பினும் அவர் எப்படியேனும் தனக்கு கால்சீட் தந்து விடுவார் என்ற நம்பிக்கையில் சில டைரக்டர்களை அழைத்து அவருக்கு பொருத்தமான கதை கேட்பதில் தீவிரமடைந்திருக்கிறார் புன்னகைபூ கீதா.

No comments:

 
FreeWebSubmission.com