Tuesday, January 29, 2013

உடல் எடையை குறைக்கிறார் அஞ்சலி!

கலகலப்பு படத்தில் படுகவர்ச்சியாக நடித்த அஞ்சலி அப்போது ஓரளவு உடல் பெருத்துதான் இருந்தார். அதனால்தான் அந்த கவர்ச்சிகரமான வேடமும் பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆனது. ஆனால் அந்த படத்தில் நடித்த பிறகு தன்னை திரையில் பார்த்த அஞ்சலிக்கு பேரதிர்ச்சியாக இருந்ததாம். கதாநாயகியான நான் அயிட்டம் நடிகை போல் ஆகிவிட்டேனே என்று புலம்பியிருக்கிறார். அதனால் இனிமேல் அயிட்டம் பாடல்களுக்கே நடனமாடினாலும் இந்த அளவுக்கு கவர்ச்சி காட்டமாட்டேன் என்று முடிவெடுத்த அஞ்சலி, தனது உடல் எடையை குறைக்கும முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்.

அதோடு, சேட்டை, மதகஜராஜா படங்களில் நடிப்பதற்கு முன்பு உடம்பை குறைத்து விட்டு வருகிறேன் என்றும் ஒருமாத காலம் அவகாசம் கேட்டிருக்கிறார். அதையடுத்து இப்போது ஸ்லிம்மாகி விட்டார் நடிகை. அடுத்தடுத்து அவரது நடிப்பில் வெளியாகும் படங்களில் ஆரம்பத்தில் பார்த்தது போன்ற சற்று ஒல்லியான அஞ்சலியை பார்க்கலாமாம். மேலும், உடம்பை இதே ரேஞ்சில் மெயின்டெயின் பண்ணும் பொருட்டு, படப்பிடிப்பு தளங்களில் தனக்கு என்னென்ன உணவு வகைகளை தர வேண்டும் என்பது பற்றி தனது உதவியாளர் மூலம் புரொடக்சன் கண்ட்ரோலர்களுக்கு தினமும் ஒரு பட்டியலே அனுப்பி விடுகிறாராம் அஞ்சலி.

No comments:

 
FreeWebSubmission.com