கமல் மீது எனக்கு தனிப்பட்ட வெறுப்பு எதுவும் கிடையாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் ஒரு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. படத்தை தடை செய்வததற்கு அரசியல் ரீதியாகவும் ஒரு காரணம் என்று பேச்சு எழ தொடங்கிவிட்டது. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா, தற்போது விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக மாநிலத்தில் பல்வேறு விதமான பிரச்னைகள் எழுந்து கொண்டு இருக்கிறது. விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக முஸ்லிம் அமைப்பை சேர்ந்த 24 அமைப்புகள் என்னிடம் புகார் கொடுத்தனர். இந்த படத்தை திரையிட்டால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று கூறினர். மேலும் உளவுத்துறையும் இப்படத்தால் மாநிலத்தில் பிரச்னைகள் எழும் என்று கூறியிருந்தனர். அதனாலேயே இப்படத்தை தடை செய்தோம்.
தனிப்பட்ட வெறுப்பு எதுவும் கிடையாது : தற்போது தமிழகத்தில் மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 718 போலீஸ் பணியிடங்கள் உள்ளன. இதில் 21 ஆயிரத்து 911 பணியிடங்கள் காலியாக உள்ளது. மீதம் 91 ஆயிரத்து 807 போலீசார் மட்டுமே உள்ளனர். இதில் டிராபிக் போலீஸ் உள்ளிட்ட பிற பாதுகாப்பு பணிக்கு போலீஸ் போக மீதம் 9 ஆயிரத்து 226 போலீசார் மட்டுமே உள்ளனர். தமிழகத்தில் விஸ்வரூபம் படம் 524 தியேட்டர்களில் ரிலீஸ் ஆக வேண்டி இருந்தது. ஒருவேளை இப்படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டர்களும் குறைந்தது 20 போலீஸ் வீதம் 3 ஷிப்ட்களுக்கு 60 போலீசார் தேவைப்படுவர். மொத்தத்தில் 524 தியேட்டர்களுக்கு பாதுகாப்புக்காகவே 31 ஆயிரத்து 440 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். ஆனால் இருப்பதோ வெறும் 9 ஆயிரம் போலீசார் மட்டுமே. இப்படி இருக்கையில் படத்தை எப்படி ரிலீஸ் செய்ய முடியும். ஒருவேளை படத்தை ரிலீஸ் செய்து எதுவும் அசம்பாவிதங்கள் நடந்தால் எப்படி சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியும். எனவே மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டே படத்தை தடை செய்தோம். மற்றபடி கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு எதுவும் கிடையாது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி கிடையாது : தி.மு.க., தலைவர் கருணாநிதி, விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி இருப்பதாகவும், குறிப்பாக ஜெயா டி.விக்கு படத்தை கமல் விற்காததும், வேஷ்டி கட்டிய ஒருவர் அடுத்த பிரதமராக வருவார் என்று கமல் கூறியதால் இந்த பிரச்னை எழுந்துள்ளதாக கூறுகிறார். வேஷ்டி கட்டிய ஒருவர் பிரதமராக வர வேண்டும் என்று கமல் கூறியது அவரது கருத்து. இந்தநாட்டில் கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. கமல் தன்னுடைய கருத்தை சொல்லியிருக்கிறார். கமல் கூறும் ஒருவர் பிரதமராக வரப்போவது கிடையாது.
ஜெயா டி.விக்கும் எனக்கும் தொடர்பில்லை : ஜெயா டி.வி. என்பது இந்திய அளவில் அதிமுக ஆதரிக்கும் ஒரு டி.வி. அந்த டி.விக்கோ எனக்கோ எந்த தொடர்ப்பும் கிடையாது. மேலும் அந்த டி.வி. நிறுவனத்தில் ஒரு பங்கு கூட எனக்கு கிடையாது. அப்படி இருக்கையில் ஜெயா டி.விக்கு படத்தை விற்கவில்லை என்பதால் படத்தை தடை செய்கிறோம் என்பதை ஏற்க முடியாது.
மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு : தமிழக சினிமா ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் ஒரு படத்திற்கு மாநில அரசு நேரிடையாக தடை விதிக்க முடியும். இதன் அடிப்படையிலேயே டேம் 999 படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதேப்போன்று சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு இப்படமும் தடை செய்யப்பட்டது.
கமல் முன்வரவில்லை : விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும், நடிகர் கமல் ஒரு காட்சியைக் கூட நீக்க தயாராக இல்லை. சமரசத்துக்கும் கமல் முன்வரவில்லை. கமல் பெரிய முதலீட்டில் படம் எடுத்திருந்தாலும், அதற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். படத்துக்கு அனுமதி அளித்து பெரிய கலவரம் ஏற்பட்டிருந்தால் அப்போதும் மீடியாக்கள் என்னை விமர்சித்திருக்கும். அரசு எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்க முடியாது.
சமரசத்திற்கு அரசு துணை நிற்கும் : சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்குவதாக கமல் தெரிவித்துள்ளார். கமலும், முஸ்லிம் அமைப்பினரும் சுமூகமாக பேசி இப்பிரச்னையை தீர்த்துக் கொள்ள முன்வந்தால், தமிழக அரசு அதற்கு உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.

No comments:
Post a Comment