விஷால் கதாநாயகனாக நடிக்கும்" பட்டத்து யானை படத்தில் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா, கதாநாயகியாக அறிமுகமாகிறார். தன் மகள் ஐஸ்வர்யாவை, சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் அர்ஜூன் அறிமுகம் செய்து வைத்து, பேசும்போது,"நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என்ற முறையில் பல மேடைகளில் நான் ஏறிஇருக்கிறேன். ஆனால், என் மகளை அறிமுகப்படுத்துகின்ற மேடை எனக்கு புதிதாக இருக்கிறது. இது, எனக்கு புதிய அனுபவம். சினிமா தான் எனக்கு பணம், புகழ், சந்தோஷம், நல்ல நண்பர்கள் ஆகியவற்றை கொடுத்தது. என் மகள், அவராக விருப்பப்பட்டுத் தான், நடிக்க வந்து உள்ளார் என்றார். ஐஸ்வர்யா பேசும் போது,"என் அப்பாவிற்கு தொழில் பக்தி அதிகம். அவர் வழியை நானும் பின்பற்றுவேன். என், தந்தை இயக்கும் படத்தில் நடிக்க, நான் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.
Sunday, January 6, 2013
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment