Tuesday, December 11, 2012

உன் ஆட்சி எப்போ தலைவா? ரஜினியை கேட்கும் ரசிக கோடிகள்

ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், ஆட்சியாளர்களை நிர்ணயிக்கிற ஆற்றல் ரஜினியின் மந்திர வார்த்தைகளுக்கு இருக்கிறது என்று சில முக்கிய அரசியல் கட்சி தலைவர்களே நம்பினார்கள். ஆனால் அதன்பிறகு நடைபெற்ற சில தேர்தல் முடிவுகள் ரஜினி ஆதரித்த கட்சிக்கு ஆதரவாக இல்லாததால், அந்த நம்பிக்கை பொய்யாகிப்போனது. இருப்பினும் ரஜினியை அரசியலுக்கு இழுத்து விடவேண்டுமென்று சில கட்சிகளும், அவரது ரசிகர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில், விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்துக்குப்பிறகு, ரஜினி வருவதற்கான வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இதனால் அதுவரையில் அவரது ரசிகர்கள் மத்தியில் இருந்த நம்பிக்கைகள் படிப்படியாக குறையத் தொடங்கின. இந்நிலையில், வருகிற 12.12.2012 அன்று ரஜினிக்கு 62 வயது முடிந்து 63 தொடுவதைத் தொடர்ந்து தமிழகமெங்கிலுமுள்ள அவரது ரசிக கோடிகள் அவருக்கு வாழ்த்து சொல்லி வரும் இந்த நேரத்தில், தமிழகத்தின் சில ஊர்களில் உள்ள ஆட்டோக்களில், மாநில ஆட்சிங்கிறாங்க, மத்திய ஆட்சிங்கிறாங்க, உன் ஆட்சி எப்போ தலைவா? என்று ரஜினியிடம் கேட்பது போல் வாசகங்களில் எழுதியிருக்கிறார்கள். அதோடு பிறந்த நாளன்று முக்கிய நகரங்களில் அதுபோன்ற வாசகங்கள் அடங்கிய பிரமாண்ட போஸ்டர்களும் ஒட்டப்பட உள்ளதாம். இதனால் சில ஊர்களில் ரஜினியின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பரபரப்பு நிலவும் என தெரிகிறது.

No comments:

 
FreeWebSubmission.com