தெலுங்கு திரைப்பட உலகில், த்ரிஷாவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களான,"வர்ஷம், நுவ்வஸ்தானே நென்னோடன்டா ஆகிய படங்களை இயக்கிய, எம்.எ.ராஜு, மீண்டும், த்ரிஷாவை வைத்து, "ரம் என்ற படத்தை இயக்கப் போகிறார். "ரம் என்றதும், இது ஏதோ, "டாஸ்மாக் விவகாரம் என, நினைத்து விட வேண்டாம். "ரம்பை, ஊர்வசி,மேனகை ஆகிய பெயர்களின், முதல் எழுத்தை குறிப்பிடும் வகையில், தான், இந்த பெயரை வைத்துள்ளனராம். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில், தயாராகும் இந்த படத்தின் மூலம், கன்னடத்திலும், முதல் முறையாக, காலடி எடுத்து வைக்கிறார், த்ரிஷா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால், இந்த படத்தில், த்ரிஷாவுக்கு, செமத்தியான கேரக்டராம். சண்டை காட்சிகளும் உள்ளனவாம். இதுவரை, காதல் காட்சிகளில் மட்டுமே, உருகி, உருகி நடித்து வந்த, த்ரிஷா, இந்த படத்தின் மூலம், வில்லன் வகையறாக்களை, பெண்டெடுக்கப் போகிறாராம்.
Wednesday, December 26, 2012
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment