Tuesday, December 11, 2012

ப்ரீத்தி ஜிந்தா ரிட்டர்ன்ஸ் இன் "இஸ்க் இன் பாரீஸ்!!

"இஸ்க் இன் பாரீஸ் என்பதற்கு பதிலாக இந்த படத்துக்கு, "ப்ரீத்தி ஜிந்தா ரிட்டர்ன்ஸ் என, பெயர் வைத்திருந்தால், இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். பாலிவுட்டின் "மாஜி கனவு தேவதை ப்ரீத்தி ஜிந்தா, ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தியதை அடுத்து, திரைப்படங்களில் நடிப்பதில், ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார்.  இதனால், ப்ரீத்தியையும் பாலிவுட், கை கழுவியது. வாய்ப்புக்காக காத்திருந்து... காத்திருந்து... நொந்துபோன ப்ரீத்தி, சொந்தமாகவே படத்தை தயாரிக்க முடிவு செய்து, இதோ, "இஸ்க் இன் பாரீஸ் என்ற படத்தை  தயாரித்துள்ளார். முழுக்க முழுக்க, பிரான்சில் நடக்கும் கதை இது. இதனால், பாரீஸ் நகரத்தின் பிரமிக்க வைக்கும் அழகை, பிலிம் ரோலுக்குள் பதிவு செய்து, ரசிகர்களுக்கு விருந்து படைக்க போகின்றனர். பிரேம் ராஜா என்பவர், இயக்கும் இந்த படத்தில், சல்மான் கானும், சிறப்பு தோற்றத்தில் சில காட்சிகளில் வருகிறார். காதலுக்கு நேர்மாறான மனப்பான்மை உடைய, இளைஞனும், இளைஞியும், எதிர்பாராத விதமாக, காதலில் விழுவதே, படத்தின் கதை.

No comments:

 
FreeWebSubmission.com