"டைட்டானிக் படத்தில், ஜாக் என்ற கேரக்டரில் நடித்து, உலகம் முழுவதும் உள்ள, திரைப்பட ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர், லியானர்டோ டிகாப்ரியோ. "இன்செப்ஷன், ரோமியோ அண்ட் ஜூலியட் போன்ற படங்களிலும் நடித்துள்ள இவர்,"கோல்டன் குளோப் உட்பட, ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். சமீபத்தில், தன், 38வது பிறந்தநாளை, நியூயார்க்கில் விமரிசையாக கொண்டாடினார். ஹாலிவுட் நடிகைகள், பியான்ஸ் நோவெல்ஸ், கேமரூன் டயாஸ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களுக்கு, மது விருந்து அளித்தார். இதற்காக, உயர்ரக "ஷாம்பெய்ன் மது பானத்துக்கு, டிகாப்ரியோ ஆர்டர் கொடுத்திருந்தார். கொண்டாட்டமும், உற்சாகமும், படிப்படியாக அதிகரித்துக் கொண்டே சென்றதால், முதலில் ஆர்டர் செய்திருந்த மது பானங்கள், விரைவிலேயே காலியாகி விட்டன. இதனால், நள்ளிரவில் கடைகளை திறந்து, மீண்டும் ஏராளமான மது பானங்கள் வாங்கப்பட்டன. அடுத்த நாள், பில்லை "செட்டில் செய்வதற்காக சென்ற டிகாப்ரியோவுக்கு, தலை சுற்றி விட்டதாம். ஒரே நாள் இரவில், 16 கோடி ரூபாய் மதிப்புள்ள மது பானங்களை, இவரது நண்பர்கள் குழு, குடித்து தீர்த்திருக்கிறது.
Tuesday, December 4, 2012
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment