"ஆடுகளம், பொல்லாதவன் ஆகிய படங்களில் நடித்து, பிரபலமான கி÷ஷாரும், சினேகாவும், முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் இது. குமாரவேலன் இயக்குகிறார். படத்துக்கு இசை அமைத்துள்ளவர், விஜய் ஆண்டனி. எட்டு வயது சிறுவனின் வாழ்க்கையை பற்றியும், அவனது தந்தையை பற்றியும், அந்த சிறுவனின் பார்வையிலேயே, விவரிக்கப்படும் வகையில், இந்த படத்தின் திரைக் கதை அமைக்கப்பட்டுள்ளது என்பது தான், இந்த படத்தின் ஹைலைட். "சிறுவனாக இருந்தாலும் சரி; சிறுமியாக இருந்தாலும் சரி. அவர்களின் ஹீரோவாகவும், அவர்களின் முதல் இன்ஸ்பிரேஷனாகவும், இருப்பது, அவர்களின் தந்தை தான். இதைத் தான், இந்த படத்தில், சற்று வித்தியாசமாக விளக்கியுள்ளோம் என கூறும், இயக்குனர், " இந்த படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு, வித்தியாசமான அனுபவம் காத்திருக்கிறது என, உறுதியாக கூறுகிறார். திருமணத்துக்கு பின், சினேகா, இந்த படத்தில் தான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதால், இந்த படத்திலிருந்து, சினேகாவின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமாகிறது.
Monday, November 26, 2012
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment