Thursday, November 15, 2012

இயக்குனர்களுடன் ரகசிய மீட்டிங் போடும் சமந்தா!

மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குனர்களின் படங்களில் கமிட்டாகி விலகி விட்டதால், சமந்தாவின் அழகு மீது இயக்குனர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தோல் அலர்ஜி நோய் காரணமாக அவரது உடல் அழகு குறைந்திருக்குமோ என்று நினைக்கிறார்கள். இதனால் சமந்தா மீண்டும் நடிக்க வந்து விட்ட செய்திகள் வெளியானபோதும் டைரக்டர்களுக்கு அவர் மீது எந்தவித ஈர்ப்பும் ஏற்படவில்லை. மாறாக, சமந்தாவுக்காக கதை பண்ணி வைத்திருந்தவர்கள்கூட இப்போது வேறு நடிகைகளை தேடிச்சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்த சேதியை அறிந்த சமந்தா, இப்படியே விட்டால் தனது நிலைமை மோசமாகி விடும் என்று சில முக்கியத்துவம் வாய்ந்த தமிழ், தெலுங்கு டைரக்டர்களை நேரில் சந்தித்து வருகிறார். அதோடு உடம்பு முழுக்க கவர் பண்ணும் ஆடைகளை உடைத்தி வந்தால் தோல் நோயால் ஏற்பட்ட உடல் மாற்றத்தை மறைக்கத்தான் அப்படி வந்திருப்பதாக நினைப்பார்கள் என்று படுகவர்ச்சியாக டிரஸ் அணிந்து வருகிறார் சமந்தா. அதனால் பெரும்பாலும் பகல் நேரங்களை விடுத்து இரவு நேரங்களாகப்பார்த்து கவர்ச்சி உடைதரித்து டைரக்டர்களை ரகசியமாக சந்தித்து வருகிறார். சமந்தாவை சினிமாவில்கூட அப்படி பார்த்திராத இளவட்ட இயக்குனர்கள் அவரது பளிச்சிடும் இளமையைப்பார்த்து சொக்கிப்போகிறார்களாம். இதனால் இதுபற்றி இயக்குனர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள, மீணடும் சத்தமில்லாமல் சமந்தாவின் மார்க்கெட் எகிறும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

No comments:

 
FreeWebSubmission.com