அருந்ததி, அனுஷ்காவுக்கு பெரிய என்ட்ரியை கொடுத்த படம். ஆனால் அந்த படத்திற்கு பிறகு அதற்கு இணையான வேடங்கள் அவருக்கு அமையவில்லை. திறமையான நடிகை என்று தெரிந்தும்கூட சாதாரண நடிகைகளைப்போன்று டூயட் பாடல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறார் அனுஷ்கா. இருப்பினும் அவருக்கென்று தமிழில் தனிப்பட்ட கிரேஸ் இருந்து வந்தது.
ஆனால் அந்த கிரேஸ் தற்போது குறைந்து விட்டது. காரணம், தாண்டவம் படத்தில் அனுஷ்காவின் கேரக்டரும், அவரது நடிப்பும் அவரது அபிமானத்துக்குரிய ரசிகர்களுக்கே பிடிக்கவில்லையாம். அதனால் அவரது பெருவாரியான ரசிகர்கள் தற்போது காஜல் அகர்வால், சமந்தா போன்ற நடிகைகள் பக்கம் திரும்பி விட்டனர். இந்த தகவலை சிலர் டுவிட்டர் மூலம் அனுஷ்காவுக்கே தெரியப்படுத்தி வருகிறார்களாம். இதனால் அதிர்ச்சியடைந்து போயிருக்கிறார் அனுஷ்கா. இந்நிலையில், தனது ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக, இரண்டாம் உலகம் படத்தில் வித்தியாசமான இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறேன். அது உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்று டுவிட்டர் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கிறார் அனுஷ்கா.

No comments:
Post a Comment