Thursday, November 15, 2012

வந்தாள் மகாலெட்சுமி: சிலிர்க்கிறார் ஸ்வேதா

மலையாள திரைப்படத்துக்காக, தன்னுடைய பிரசவத்தையே, நேரடியாக படம் பிடிக்க  அனுமதித்து, சமீபத்தில் தலைப்புச்  செய்திகளில் இடம் பிடித்தவர், நடிகை ஸ்வேதா மேனன். குழந்தை வந்த நேரமோ...  என்னவோ... ஸ்வேதாவுக்கு அதிர்ஷ்டக் காற்று, அசத்தலாக வீசத் துவங்கியுள்ளது. கேரள மாநில அரசின் விருதுகள், சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில், "சால்ட் இன் பெப்பர் என்ற படத்தில் நடித்ததற்காக, ஸ்வேதாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. சமீபத்தில், திருவனந்தபுரத்தில் நடந்த  நிகழ்ச்சியில் விருது வாங்குவதற்காக, பிறந்து, 40 நாட்களே ஆன, தன்னுடைய பெண் குழந்தையுடன் வந்திருந்தார், ஸ்வேதா. விருது வாங்குவதற்காக மேடைக்கு சென்ற போதும், குழந்தையுடன் தான் சென்றார். விழாவுக்கு வந்திருந்த, அனைவரின் பார்வையும், அந்த அதிர்ஷ்டக்கார குழந்தை மீதே, பதிந்திருந்தன. "குழந்தைக்கு சபைனா என, பெயர்  வைத்துள்ளோம். இவள், பிறந்த அடுத்த நொடியே, பிரபலமாகி விட்டாள். இப்போது, எனக்கும் விருது கிடைத்திருக்கிறது. எல்லாம், இவள் வந்த நேரம் தான் என, வார்த்தைக்கு வார்த்தை, தன் மகளை பாராட்டி தள்ளுகிறார், ஸ்வேதா

No comments:

 
FreeWebSubmission.com