மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "பில்லா-2 கவிழ்த்து விட்டதால், அஜீத்தின் அடுத்த படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர், அவரது ரசிகர்கள். அஜீத் ரசிகர்களை திருப்தி படுத்துவதற்காகவே, மிகவும் "ஸ்டைலிஷ்ஆன ஒரு படத்தை, மிகவும் மும்முரமாக இயக்கி வருகிறார், விஷ்ணுவர்த்தன். அஜீத்துடன், ஆர்யா, நயன்தாரா, டாப்சி, கிஷோர் என, பெரும் நட்சத்திர பட்டாளமே, இந்த படத்தில் நடிக்கிறது. இதன் படப்பிடிப்பு, மும்பையில் வேகமாக நடந்து வருகிறது. ஆனாலும், இன்னும் இந்த படத்துக்கு பெயர் வைக்கப்படவில்லை. அஜீத் ரசிகர்களை குஷிப் படுத்தும் வகையிலும், சஸ்பென்சாகவும், தீபாவளி தினத்தன்று, படத்தின் பெயரை அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.
Monday, November 5, 2012
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment