Monday, November 19, 2012

தமிழ், தெலுங்கில் தயாராகும் "நீ என் உயிரே"

தெலுங்கு படங்களை வாங்கி தமிழில் டப் செய்து திரையிடும் தொழில் செய்து வரும் நவரசனுக்கு தானும் ஹீரோவாக நடித்து ஒரு படத்தை வெளியிட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. எத்தனை நாளைக்குத்தான் அடுத்தவர்கள் படத்தையே வெளியிடுவது என்று கூட்டி கழித்து பார்த்து கணக்குபோட்டு "நீ என் உயிரே" என்ற பெயரில் படம் தயாரிக்க ஆரம்பித்து விட்டார். கதை, வசனம், இயக்கம், ஹீரோ எல்லாமே அவர்தான். பெங்களூர் மாடல் அழகி வைசாலி ஹீரோயின். ஒரு பெண் நினைத்தால் ஓரு குடும்பத்தை வாழ வைக்கவும் முடியும், நாசமாக்கவும் முடியும் என்ற இதுவரை யாரும் சொல்லாத கருத்தை(?) வலியுறுத்தி படம் தயாராகி வருகிறது.

No comments:

 
FreeWebSubmission.com