Wednesday, November 28, 2012

டென்மார்க் பெண் இயக்குனரின் பிரதர்ஸ்! கோவா படவிழா ஸ்பெஷல்

மைக்கேல், அமெரிக்க ராணுவ அதிகாரி மனைவி சாரா. இரு குழந்தைகள். தெளிவான வாழ்க்கை, ஆப்கானிஸ்தானுக்கு மைக்கேல் அனுப்பப்படுகிறார். அங்கு அவர் செல்லும் விமானம் தாக்கப்பட்டு எரிந்து கீறே விழுகிறது. மைக்கேல் இறந்துவிட்டதாக அமெரிக்க ராணுவம் கருதி, அவ‌ர் மனைவியிடம் விஷயத்தை தெரிவிக்கிறது. மைக்கேலின் தம்பி ஜென்னிக் அந்த குடும்பத்திற்கு துணையாக இருக்கிறார். விமான விபத்தில் இறந்ததாக கருதப்படும் மைக்கேல் ஆப்கானியர்களால் சிறை பிடிக்கப்படுகிறார். புதுரக ஏவுகணை தாக்கும் இயந்திரத்தை எப்படி இயக்குகிறது என்று அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார். இவரையும் உடன் இருக்கும் நீல்சன் என்ற அமெரிக்க அதிகாரியையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்ல திட்டமிடுகிறார்கள். நீல்சனை நீயே ‌கொன்றால் நீ வாழலாம், இல்லாவிட்டால் இருவரையும் கொன்றுவிடுவோம் என்று தீவிரவாதிகள் சொல்ல, தான் வாழ வேண்டும் என்ற வெறியில் நீல்சனை அடித்து கொன்று விடுகிறான் மைக்கேல். சொந்த ஊருக்கு மீண்டும் மைக்கேல் திரும்பியதும் அனைவருக்கும் மகிழ்ச்சி. தன் மனைவி சாராவுக்கும், ஜென்னிக்கும் தகாத உறவு இருந்திருக்‌குமோ என்று சந்தேகம் வந்துவிடுகிறது. அந்த மாதிரி எதுவும் கிடையாது என்று இருவரும் சொல்கிறார்கள். சாரா தான் ஜென்னிக்கு முத்தமிட்டதை மறைக்காமல் சொல்லுகிறாள். வெறி பிடித்தவன் போல ஜென்னி அமைத்து கொடுத்த கிச்சன் அதில் உள்ள பொருள்களை ஆத்திரத்தில் உடைக்கிறான் மைக்கேல். மேலும் வெறியில் சாராவை கொல்ல வருகிறான்.

போலீஸ் மைக்கேலை பிடித்து செல்கிறது. பல பதக்கங்கள் பெற்ற ராணுவ மேஜர் என்பதால் மைக்கேலை விடுவிக்கிறது போலீஸ். பின்னர் சகோதரர்கள் இடையே மீண்டும் நல்ல பிணைப்பு ஏற்படுகிறது. கோபம் தணிந்த மைக்கேல் சாரா உன் மனதில் என்ன பாதிப்பு. ஆப்கானிஸ்தானில் நடந்தது என்ன? என்று துருவி துருவி கேட்பார் . பதில் இல்லை. இதற்கிடையே நீல்சனின் வீட்டிற்கு சென்று அவர் மனைவியை சந்தித்து பேசுகிறார் மைக்கேல். தன் கணவர் உயிரோடு இருக்கிறார், ஒருநாள் திரும்பி வந்து விடுவார் என்று ஆழமாக நம்பும் நீல்சன் மனைவியிடம் உன் கணவரை நான் கொன்று விட்டேன் என்று சொல்ல முடியாமல் மைக்கேல் திரும்பி விடுகிறார்.

தன் மனைவி குழந்தைகளை மிகவும் நேசித்ததால் தான் வாழ வேண்டும் அதற்கு எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று செயல்பட்ட மைக்கேலை குற்றமனப்பான்மை தாக்குகிறது.

இன்று ஐரோப்பிய நாடுகளில் உள்ள வெற்றிகரமான டைரக்டர்களில் ஸீஸன் பேர் முன்னணியில் இருக்கிறார். டேனிஷ் மொழியில் இவர் படம் எடுத்தாலும் ஆங்கிலம் சரளமாக பேசுகிறார்.

No comments:

 
FreeWebSubmission.com