"பட்டாளம்" படத்தில் அறிமுகமானவர் தீப்தி. அதில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். அதன் பிறகு "எங்கேயும் எப்போதும்" படத்தில் பஸ்சிற்குள் காதல் வந்து பஸ் விபத்தில் இறந்து போகும் கேரக்டரில் நடித்தார். "துப்பாக்கி" படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு அண்ணனால் மீட்கப்பட்டு அந்த அண்ணனையே கேள்வி கேட்கும் துணிச்சலான கேரக்டரில் நடித்தார்.
தற்போது தீப்தி ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் வின்செண்ட் செல்வா இயக்கி வரும் "துள்ளி விளையாடு" படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இனிமேல் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று தீப்தி கூறுகிறார். மேலும் அவர் கூறியதாவது: பட்டாளம் படத்தில் ஹீரோயினாகத்தான் அறிமுகமானேன். ஆனால் அதில் பள்ளி மாணவியாக நடித்ததால் காதல், டூயட் எதுவும் கிடையாது, அதனால் ஹீரோயினுக்கான அங்கீகாரத்தை பெறவில்லை. ஏ.ஆர்.முருகதாஸ் சார் தயாரிக்கும் படம் என்பதால் "எங்கேயும் எப்போதும்" படத்திலும், விஜய் சாரின் தங்கை என்பதால் துப்பாக்கி படத்திலும் நடித்தேன். ஒரு படத்தில் உன்னை ஹீரோயின் ஆக்குகிறேன் என்று முருகதாஸ் சார் சொல்லியிருந்தார். அதற்குள் "துள்ளி விளையாடு" வாய்ப்பு வந்து விட்டது. திடீர் பணக்காரர்கள் ஆகும் நான்கு இளைஞர்களுக்கிடையே வரும் ஒரு இளம் பெண்ணின் கேரக்டர். நடிப்பற்கு நிறைய வாய்ப்புள்ள கேரக்டர். துப்பாக்கி படம் நல்ல பாப்புலாரிட்டிய கொடுத்தது. எங்கு போனாலும் "அதோ பார் விஜய் தங்கை போறா"ன்னு சொல்றப்போ சந்தோஷமா இருக்கு. இந்த தங்கச்சி இமேஜ்லேருந்து துள்ளி விளையாடு என்னை மாற்றும். நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என்கிறார் தீப்தி.

No comments:
Post a Comment