Wednesday, November 21, 2012

டிசம்பர் 14-ல் கும்கி ரிலீஸ்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மைனா படத்திற்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டைரக்டர் பிரபுசாலமனின் கும்கி படம் டிசம்பர் 14ம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது. மைனா படத்தின் வெற்றியை தொடர்ந்து டைரக்டர் பிரபுசாலமன் இயக்கியுள்ள படம் கும்கி. இப்படத்தில் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாக, கேரள வரவு லட்சுமி மேனன் ஹீரோயினாக நடிக்கிறார். டி.இமான் இசையமைத்துள்ளார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். முதல்படத்திலேயே சவாலான வேடம் அதாவது யானை பாகனாக நடித்துள்ளார் விக்ரம் பிரபு.  இதற்காக விக்ரம் பிரபுவுக்கு ஒரு யானையை ‌கொண்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மைனா படத்தை போன்றே பல அழகான இடங்களில் கும்கியை படமாக்கியுள்ளார் பிரபுசாலமன். அதிலும் குறிப்பாக ஒரு பாட்டுக்காக ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் விழ வேண்டும் என்பதற்காக 8 மாதம் காத்திருந்து படமாக்கியிருக்கிறார். தீபாவளிக்கே வெளிவருவதாக இருந்த கும்கி படம் சில பல காரணங்களால் தள்ளிப்போனது.

இந்நிலையில் வருகிற டிசம்பர் 14ம் தேதி கும்கி படம் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கும்கி படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் உலகம் முழுக்க ரிலீஸ் செய்கிறது. தமிழகம் முழுக்க பெரும்பாலான இடங்களில் ஸ்டுடியோ கிரீன் ‌நிறுவனமே நேரடியாக ‌வெளியிட உள்ளது.

No comments:

 
FreeWebSubmission.com