Thursday, October 25, 2012

அக்ஷய்குமார் படத்துக்காக மகேஷ்பாபு படத்தை டீலில் விட்ட காஜல்அகர்வால்!

பாலிவுட்டில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதுதான் காஜல் அகர்வாலின் கனவே. ஆனால் அவரை நடிகையாக அங்கீகரித்தது என்னவோ தென்னிந்திய சினிமாதான். அவர் நடிக்கத் தொடங்கியது முதல்இப்போது வரை பிசியான நடிகையாகத்தான் இருந்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் ரவிதேஜாவுடன் சார் வச்சாரு, ஜூனியர் என்.டி.ஆருடன் பாட்ஷா, ராம்சரணுடன் நாயக் போன்ற படங்களில் நடித்திருப்பவர், தமிழில் மாற்றான், துப்பாக்கி படங்களை முடித்திருக்கிறார்.

இந்த நிலையில், அடுத்தபடியாக தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ஒரு படத்தில் நடிப்பதற்காக காஜலுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் முதலில் ஓ.கே சொல்லியிருந்த காஜல் அகர்வால், திடீரென்று தனக்கு இந்தியில் அக்ஷய்குமாருடன் நடிக்க வாய்ப்பு வந்ததால், மகேஷ்பாபு படத்தை கண்டுகொள்ளவே இல்லையாம். படப்பிடிப்பு நடைபெற இருந்த சில தினங்களுக்கு முன்பு தொடர்பு கொண்டபோது, முதலில் மகேஷ்பாபு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குங்கள். நான் அக்ஷய்குமார் படத்தை முடித்து விட்டு வருகிறேன் என்று கேசுவலாக பதில் சொன்னாராம். அதுவும் ஆறு மாதத்துக்கு பிறகுதான் நடிப்பேன் என்றும் கூறினாராம். இதனால் டென்சனான மகேஷ்பாபு, உடனடியாக தமன்னாவுக்கு போன் போட்டு அவரை கமிட் பண்ணி விட்டாராம். காஜல்அகர்வால் ஒரு முன்னணி தெலுங்கு நடிகரின் படத்தையே இப்படி அலட்சியம் செய்ததால், அடுத்தடுத்து அவரை ஆந்திர படங்களில் நடிக்க விடக்கூடாது என்றும் அங்குள்ளவர்கள் முடிவெடுத்திருக்கிறார்களாம்.

No comments:

 
FreeWebSubmission.com