Tuesday, October 30, 2012

தென்னிந்திய படங்களை அலட்சியம் செய்யும் விமலாராமன்!

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த நடிகைகளில் விமலாராமனும் ஒருவர். கே.பாலசந்தர் இயக்கிய பொய் படத்தில் அறிமுகமான இவர் அதையடுத்து ராமன் தேடிய சீதை என்ற படத்திலும் நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே ஊத்திக்கொண்டதால், அதன்பிறகு விமலாவை கழட்டி விட்டது கோடம்பாக்கம். அதன்காரணமாக அண்டை மாநில மொழிப்படங்களில் நடிக்க முட்டிமோதிய விமலாராமன் இப்போது பாலிவுட்டில் போய் இறங்கியிருக்கிறார்.

அங்கு இரண்டு மெகா படங்களில் படுகவர்ச்சி நாயகியாகவும் துகிலுரிந்து நிற்கிறார். புதுகவர்ச்சி என்பதால் அங்குள்ள படாதிபதிகள் விமலா சொன்ன ரேட் கொடுத்து அவரை படங்களுக்கு புக் பண்ணி விட்டார்களாம். பாலிவுட்டில் தனக்கு கிடைத்த இந்த மரியாதையினால் தலைகால் புரியாமல் இருக்கிறார் விமலாராமன். அதன்காரணமாக, மலையாளம் மற்றும் தமிழில் இருந்து சென்ற இரண்டு படவாய்ப்புகளை திருப்பி அனுப்பி விட்டுள்ளார். அதோடு இப்போது நான் நடிக்கிற படங்களும் பெரிய பட்ஜெட், எனது சம்பளமும் ரொம்ப பெரிய சம்பளம். அதை உங்களால் தர முடியாது என்று கிண்டலாக சொன்னாராம் நடிகை.

No comments:

 
FreeWebSubmission.com