தென்மேற்கு பருவக்காற்று, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், பீட்சா ஆகிய படங்களில் நடித்தவர் விஜய் சேதுபதி. இதில் கடைசியாக வெளியான பீட்சா படம் தற்போது திரையிடப்பட்ட அனைத்து ஏரியாக்களிலும் வசூல் சாதனை செய்து கொண்டிருக்கிறது. அதனால் இதுவரை விஜய்சேதுபதியை மனதில் கொள்ளாத முன்னணி இயக்குனர்கள்கூட இப்போது அவர் பக்கம் திரும்பியிருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது 5 இயக்குனர்களிடம் கதை கேட்டிருக்கிறார் விஜய்சேதுபதி. ஆனால் இன்னும எந்த படத்தையும் ஓ.கே செய்யவில்லையாம். அடுத்து நடிக்கப்போகிற படம் இதுவரை நடித்த படங்களை விட வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என்பதால், நிறைய கதைகளைக்கேட்டு அதில் நல்லதை ஓ.கே செய்யப்போகிறேன் என்கிறார். அவரிடத்தில், எந்த மாதிரியான கதைகளை எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்டால், இந்த மாதிரியான கதைகள்தான் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்று எந்த வரையறையும் வைத்துக்கொள்ளவில்லை. என்னைப்பொறுத்தவரை நல்ல கதை வேண்டும். அது எந்த மாதிரியான கதையாக இருந்தாலும் அதற்கேற்ப என்னை செட் பண்ணிக்கொள்வேன். அந்த வகையில் எப்போதும் நான் கதையின் நாயகனாக இருப்பேன் என்கிறார் விஜய் சேதுபதி.

No comments:
Post a Comment