Wednesday, October 17, 2012

தயாரிப்பாளராகிறார் செல்வராகவன்

"ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற, வித்தியாசமான படங்களை இயக்கிய செல்வராகவனுக்கு, படங்களை தயாரிப்பதில் ஆசை வந்து விட்டது. அடுத்த ஆண்டிலிருந்து, புதிதாக பல படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம். கோலிவுட்டில், கனவுகளுடன் வலம் வந்து கொண்டிருக்கும், பல திறமையான, இளம் தலைமுறை கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், செல்வராகவன், தொடர்ச்சியாக படங்களை தயாரிக்கப் போவதாக, தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும், படத் தயாரிப்பு விஷயங்களில் அவசரம் காட்டப் போவதில்லை என்றும்,  திறமையான இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தகுந்த வாய்ப்பை அளிக்கவுள்ளதாகவும், செல்வராகவன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

 
FreeWebSubmission.com