Friday, October 26, 2012

சங்கவி ரகசிய திருமணம்?

இளைய தளபதி விஜய்யின் முதல் ஹீரோயின் சங்கவி. தற்போது 40 வயதை தொட்டிருப்பார். சென்னை ராமவரத்தில் உள்ள ராணுவ காலனியில் வசித்து வருகிறார். சங்கவிக்கு திருணம் செய்து வைக்க அவரது அம்மா பல இடங்களில் மாப்பிள்ளை தேடினார். சரியான வரண் அமைவதும், பின்னர் அது தடைபட்டு விடுவதுமாகவே இருந்தது. சங்கவி திருமணம் பற்றிய செய்திகள் வெளிவந்து விட்டால் அது தடைபட்டு விடுகிறது. இதுகுறித்து சங்கவியின் தாயார் பிரபல மலையாள ஜோதிடர் ஒருவரிடம் கேட்டிருக்கிறார். அவர் "சங்கவியின் ஜாதகப்படி அவருக்கு தடபுடல் திருமண பாக்கியம் இல்லை. அதை ரகசியமாகத்தான் செய்ய வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார். இதனால் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மாப்பிள்ளை தேடிப் பிடித்திருக்கிறார் அம்மா. இந்த விஷயத்தை மாப்பிள்ளை வீட்டாரிடமும் சொல்லி சம்மதம் வாங்கி விட்டாராம். ஐதராபாத்தை சேர்ந்தவர்தான் மாப்பிள்ளை. அங்கு அவர் ஷாப்பிங் மால் ஒன்றை நடத்துகிறாராம். திருமணம் ரகசியமாக நடந்து இருவரும் ஐதராபாத்தில் செட்டிலாகிவிட்டதாக சொல்கிறார்கள். சிலர் இன்னும் திருமணம் நடக்கவில்லை. பேசி முடித்திருக்கிறார்கள், டிசம்பரில் திருப்பதியில் திருமணம் என்றும் சொல்கிறார்கள். எது உண்மை, எது வதந்தி என்று தெரியவில்லை.

No comments:

 
FreeWebSubmission.com