சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த "இம்சை அரசன் 23ம் புலிகேசி பயங்கர ஹிட்டாகி, வசூலை வாரிக் குவித்தது. படம் முழுவதும், களை கட்டிய காமெடி வசனங்கள், கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்தன. சில ஆண்டுகள் "பிரேக்கிற்கு பின், தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகப் போகிறதாம். இரண்டாம் பாகத்திலும், சிம்புதேவன்-வடிவேலு கூட்டணி தான், கலாய்க்க காத்திருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும், படத்திற்கான தலைப்பு இம்சை அரசன் "24ம் புலிகேசி என்று வைக்ககூடும் என கூறப்படுகிறது. இந்த படம் வெளியானால், வடிவேலுவின் இரண்டாவது ரவுண்டு ஆரம்பமாகி விடும் என்கின்றன, கோலிவுட் வட்டாரங்கள்.
Thursday, October 25, 2012
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment