Tuesday, August 14, 2012

ஐஸ்வர்யா ராய் எனக்கு முந்தைய தலைமுறை!




பாலிவுட்டின் காந்தக் கண்ணழகி கரீனா கபூர் நடித்து வரும் ஹீரோயின் திரைப்படம், வெளிவருவதற்கு முன்பே, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில், ஐஸ்வர்யா ராய் பச்சன் தான், முதலில் நடிப்பதாக இருந்தது. குழந்தை பிறந்ததால், அவரால் நடிக்க முடியவில்லை. இதனால், இந்த வாய்ப்பு கரீனாவுக்கு சென்றது. சமீபத்தில், கரீனா கபூர் பேட்டி அளித்தபோது, இந்த படத்தில் ஐஸ்வர்யா நடித்திருந்தால், நன்றாக இருந்திருக்கும் என, நீங்கள் நினைக்கிறீர்களா, என, பத்திரிகையாளர்கள் கேட்க, அதற்கு கரீனா அளித்த பதில், பாலிவுட்டை பரபரக்க வைத்துள்ளது.என்ன சார் நீங்க. என்னைப் போய், ஐஸ்வர்யாவுடன் ஒப்பிடுகிறீர்கள். அவர், வேறு தலைமுறையை சேர்ந்தவர். நான், வேறு தலைமுறையை சேர்ந்தவள். என்னைவிட, ஏழு வயது மூத்தவர் அவர். எங்களுக்கு இடையே ஜெனரேஷன் கேப் இருக்கிறது. அவருடன், என்னை ஒப்பிட வேண்டாம், என்றார். இதை கேட்டதும், ஐஸ்வர்யா ரசிகர்கள் கொதித்துப் போய் விட்டனர். ஐஸ்வர்யாவுக்கு வயதாகி விட்டது என்பதை, மறைமுகமாக கரீனா கூறுகிறாரா? ஐஸ்வர்யா, 1997ல் இருவர் படம் மூலம், திரை உலகிற்கு அறிமுகமானார். கரீனா கபூர், 2000ல் ரெப்யூஜி படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த மூன்று ஆண்டில், என்ன பெரிய இடைவெளி இருக்கிறது, என, கோபத்துடன் கேட்கின்றனர். இதற்கு கரீனா, என்ன பதில் சொல்லப் போகிறாரோ...?

No comments:

 
FreeWebSubmission.com