Tuesday, August 21, 2012

பிபாஷாவைப் பார்த்து பயமா? மறுக்கிறார் இஷா குப்தா!

"ஜன்னத்-2 படத்துக்கு பின், "ராஸ்-3 என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார், நடிகை இஷா குப்தா. இதில், இவருடன், பிபாஷாவும் நடிக்கிறார். "பிபாஷாவும் படத்தில் இருந்தால், உங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காதே. அவர் சீனியர் நடிகை என்பதால், நடிப்பிலும், கிளாமரிலும், உங்களை தூக்கி சாப்பிட்டு விடுவாரே. அவரை பார்த்து, உங்களுக்கு பயமாக இல்லையா, என, வில்லங்கமான பார்ட்டிகள், இஷாவின் காதை கடிக்க, அவர், பயங்கர டென்ஷன் ஆகி விட்டார். "பிபாஷா என்ன பேயா. அவரை பார்த்து, நான் ஏன் பயப்பட வேண்டும். எனக்கும் திறமை, அழகு எல்லாம் இருக்கிறது.
என்னாலும் சாதிக்க முடியும். தயவு செய்து, பிபாஷாவை, என்னுடன் ஒப்பிடாதீர்கள். பிபாஷா, மிக சிறந்த நடிகை தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த படம் வெளியான பின் பாருங்கள், பாலிவுட்டில், நானும் ஒரு "ரவுண்டு வருவேன், என, கொட்டி தீர்த்து விட்டார். பதிலுக்கு, பிபாஷா என்ன கூறப் போகிறாரோ என, பாலிவுட் பரபரத்து கிடக்கிறது. 

No comments:

 
FreeWebSubmission.com