Friday, August 17, 2012

கவர்ச்சி களத்தில் ஸ்ரேயா...!




 மழை படத்தின் மூலம் பாந்தமான கேரக்டரில் தமிழுக்கு வந்தார் ஸ்ரேயா. அதன்பிறகு சில படங்களில் நடித்தாலும், சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியானதும் ஸ்ரேயாவின் கேரியர் டாப் கீயரில் எகிறியது. சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தினார். அதன்பிறகு தமன்னா, இலியானா, காஜல் என்ற இளசுகளின் எண்ட்ரிக்கு பிறகு சற்றே முதிர்ச்சியான முகம் கொண்ட ஸ்ரேயா ஓரம் கட்டப்பட்டார். வடிவேலு கதாநாயகனாக நடித்த ஒரு படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதன்பிறகு அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை.

இப்போது சந்திரா என்ற படத்தில் மைசூர் மகாராணியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடித்த ஸ்ரேயா இப்போது அப்கமிங் ஹீரோ கணேஷ் வெங்கட்ராமுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். வாய்ப்பு கேட்டு தனக்குத் தெரிந்த தயாரிப்பு நிறுவனங்கள், இயக்குனர்கள், நண்பர்களுக்கு விட்ட தூதுகள் அனைத்தும் வெற்றி பெறவில்லை. இவரும் சம்பளத்தை குறைக்க தயராக இல்லை. ஆனாலும் விட்ட இடத்தை பிடிக்க என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது "கொஞ்சம் கவர்ச்சியை அள்ளிவிடுங்க விட்ட இடத்தை பிடிச்சிரலாம்" என்று யாரோ ஆலோசனை சொல்ல களத்தில் குதித்துவிட்டார் ஸ்ரேயா.

கவர்ச்சி படங்களுக்கு பெயர் பெற்ற மேக்ஸிம் பத்திரிகையை தொடர்பு கொண்டார். "நான் ரெடி எப்படி வேணாலும் போட்டோ எடுத்து போட்டுக்குங்க" என்ற இவர் சொல்ல. கரும்பு தின்ன கூலியா என்று அந்த பத்திரிகையும் ஸ்ரேயாவுக்கு தனி போட்டோ ஷூட்டே நடத்தி தன் வாசகர்களுக்கு ஸ்ரேயே ஸ்பெஷல் கவர்ச்சி விருந்து படைத்து விட்டது. மேக்ஸிம் பத்திரிகையில் வெளிவந்துள்ள ஸ்ரேயாவின் கவர்ச்சி படங்கள்தான் இந்த வார சென்சேஷனல் மேட்டர்.

No comments:

 
FreeWebSubmission.com